மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா.

மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா.

இவருக்கு தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் 15 மாதங்களே ஆன காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழும் என்று கூறப்படுகிறது. எனவே தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைக்க வெளிமாநிலங்களில் உள்ள விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியும், அமைச்சரவையில் இடமும் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts
வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனிதர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க இந்தியாவில் ஊரடங்ககை கடைப்பிடிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்
செளதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி மற்றும் பிற செய்திகள்
புதைக்க இடமின்றி கைவிடப்படும் சடலம்; ஈக்குவேடாரில் கொரோனாவால் அவலம்