உலகின் மிக கடுமையான விதிகள் கொண்ட நாடாக கருதப்படும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அந்நாட்டில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
பெண்களை விளையாட்டில் ஊக்குவிப்பதே இந்த லீக் போட்டிகளின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செளதியில் பெண்கள் காலபந்து அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதே வருடம் செளதியில் பல தசாப்தக்காலங்களாக நிலவி வந்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டது.
அதேபோன்று கடந்த வருடம் ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டது. உணவகங்களில் ஆண் பெண் தனித்தனியாக அமர வேண்டும் என்னும் விதியும் நீக்கப்பட்டது.
இருப்பினும் பல முக்கிய பெண்கள் நல ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண் உரிமைக்காக மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்