குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. குரு தேஜ் பகதூர் மருத்துவமனை அலுவலர்கள், திங்கள்கிழமை முதல் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறியதை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது. ஜாஃபராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். "ஜாஃபராபாத் சாலை கிளியர் செய்யப்பட்டுள்ளதாகவும், வட கிழக்கு டெல்லியில் கண்டதும் சுட உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது" என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

உலகின் மிக கடுமையான விதிகள் கொண்ட நாடாக கருதப்படும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அந்நாட்டில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு பகுதியாக இந்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.


பெண்களை விளையாட்டில் ஊக்குவிப்பதே இந்த லீக் போட்டிகளின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செளதியில் பெண்கள் காலபந்து அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


அதே வருடம் செளதியில் பல தசாப்தக்காலங்களாக நிலவி வந்த பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை நீக்கப்பட்டது.


அதேபோன்று கடந்த வருடம் ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தடையும் நீக்கப்பட்டது. உணவகங்களில் ஆண் பெண் தனித்தனியாக அமர வேண்டும் என்னும் விதியும் நீக்கப்பட்டது.


இருப்பினும் பல முக்கிய பெண்கள் நல ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண் உரிமைக்காக மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.