மற்றொரு இடமான நந்துர்பார் காங்கிரஸிடம் இருந்தது. இருப்பினும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமுள்ள 332 இடங்களில் பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 74 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து காங்கிரஸ் 73, தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனாவை பொறுத்தவரை 36 இடங்களில் இருந்து 46ஆக வெற்றி அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை 100ல் இருந்து 73ஆக வெற்றி சரிந்துள்ளது

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது. வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து பாலாஜியை தரிசித்து செல்கின்றனர்.


நாள்தோறும் கூட்டம் நிரம்பி வழிவதால், பல மணிநேரம் க்யூவில் காத்திருந்து தான் இங்கு பக்தர்கள சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, பொது தரிசனத்துடன், கட்டண தரிசனம் மற்றும் விஐபி தரிசன முறையும் இங்கு நடைமுறையில் உள்ளது.

 

இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலம் விஐபி தரிசன டிக்கெட் பெற முயன்று, அதன் மூலம் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ட தெலங்கானா மாநில அரசு அதிகாரி ஒருவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.